பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று காலை வணக்கத்திற்குரிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார்!

Print tamilkin.com in இலங்கை

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று காலை வணக்கத்திற்குரிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார்.

பிரதமரும் பேராயருக்குமிடையில் சுமூகமான உரையாடல் இடம்பெற்றதென்று பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பேராயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. புதிய பிரதமராக நியமிக்கப்பட்டபின்னர் பேராயரை பிரதமர் சந்தித்துள்ளார்.

இந்த நிகழ்வில் துணை ஆயர் மெக்ஸ்வேல் சில்வா ஆண்டகை , வணக்கத்திற்குரிய பிதா அந்தோனி ஜயக்கொடி மற்றும பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.