நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி!

Print tamilkin.com in இலங்கை

நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதபதி இரு வராங்களுக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைத்த நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சபாநாயகர் கருஜெயசூரியவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.

நாடாளுமன்ற அமர்வினை உடனடியாக கூட்டுமாறு கோருவதற்காகவே சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதிக்கு இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பியுள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

ஜனாதிபதிக்கான இரண்டாவது கடிதத்தில் 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என தெரிவிக்கின்றனர் என சபாநாயகர், ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தார்.

சபாநாயகர் என்ற அடிப்படையில் நான் அதனை செவிமடுக்கவேண்டும் எனவும் கூறியிருந்தார். நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பிவைத்திருந்தார்.