வடமாகாண முதலமைச்சர் அமைச்சிற்கான செயலாளராக திருமதி சரஸ்வதி மோகநாதன்

Print tamilkin.com in இலங்கை

இந்நியமனம் வழங்கும் நிகழ்வு சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன் இன்றுடன் ஓய்வு பெற்று செல்லும் நிலையில் பதில் செயலாளராக திருமதி சரஸ்வதி மோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று வடமாகாண பிரதி பிரதம செயலாளர் நிதிப்பிரிவின் செயலாளராக திரு.ஆர்.பத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியினை வகித்து வந்த எஸ்.சந்திரகுமார் பதவி உயர்வு பெற்று சென்றதன் காரணமாக அந்த வெற்றிடத்திற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் திரு.எல்.இளங்கோவன், பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.