இலங்கையை தாக்க வரும் சூறாவளி; யாழ்ப்பாணம், கொழும்பில் அடைமழை!

Print tamilkin.com in இலங்கை

இலங்கையை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறும் அபாயம் உள்ளதாக என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று அதிகாலையில் இருந்து கொழும்பு உட்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் அடைமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டின் பல பிரதேசங்களுக்கு அருகில் வாகனம் புகைமூட்டத்தினால் நிறைந்து காணப்படும்.

நாட்டின் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு வடமேல் மற்றும் மத்திய மாகாணத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் வரையிலான அடைமழை பெய்ய கூடும்.

ஏனைய பிரதேசங்களிளல் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரையிலான அடை மழை பெய்ய கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களிலும் காலை புகைமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

தற்காலிகமாக கடும் காற்றும் மற்றும் மின்னலினால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைத்துகொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.