யாழில் அடைமழையிலும் களைகட்டும் தீபாவளி வியாபாரம்!

Print tamilkin.com in இலங்கை

தீபாவளிக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் கொட்டும் மலையிலும் தீபாவளி வியாபாரம் களைகட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக யாழில் மழை கொட்டித்தீர்க்கிறது. வீதிகளில் வெள்ளம் நிறைந்துள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால், மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் தீபாவளி பொருட்கள், ஆடைகள் வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

யாழ். நகர் பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆடைகள் வாங்குவதற்காக மக்கள் கடை கடையாக ஏறி இறங்குகின்றனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் யாழ். நகர் கடைத் தொகுதிகளில் அலைமோதுகிறது.