பெற்ற கை குழந்தையை நீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர தாய்....

Print tamilkin.com in உலகம்

தனது 4 வார குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

அமெரிக்காவின் அரிசோனா பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பெண் ஜென்னா-வுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு குழந்தை அழும் சத்தம் பிடிக்காததால், கடந்த சில வாரங்களாகவே ‘குழந்தையை கொலை செய்வது எப்படி?’, ‘காணாமல் போன குழந்தைகள்’, ‘குழந்தைகளை கொலை செய்த பெற்றோர்கள்’ என்று குழந்தையை கொலை செய்வதற்கான முறைகளை இணையதளத்தில் வலைவீசி தேடியுள்ளார்.

இதையடுத்து, பிறந்து 4 வாரங்களே ஆன தனது குழந்தையை குளியல் அறையில் உள்ள தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். தானே தனது குழந்தையை கொலை செய்துவிட்டு காவலரிடம் தனது நான்கு வாரக்குழந்தையை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அதனை அடுத்து ஜென்னாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

ஜென்னாவின் பதில்களில் சந்தேகமடைந்த போலீசார் ஜென்னாவின் வீட்டிற்கு வந்து சோதனை செய்து குழந்தையின் சடலத்தை வீட்டிலேயே கண்டெடுத்துள்ளனர். பின்னர், ஜென்னாவை கைது செய்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரந்த உலகத்தில் தனக்கு குழந்தை இல்லாமல் பலரும் அவதிபட்டும் வரும் நிலையில் இவர் தனது குழந்தையின் அழுகை சத்தம் பிடிக்காமல் தனது குழந்தையை தானே கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.