கதிர்காமர் கொலை வழக்கில் 13 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விடுதலை!

Print tamilkin.com in இலங்கை

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில், 13 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆரோக்கியநாதன் கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டிருந்த அவர், மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் நேற்று கொழும்பு மேல்நீதிமன்றத்தினால், விடுதலை செய்யப்பட்டார்.