ரணிலுக்காக ஒன்று திரண்ட மாபெரும் மக்கள் கூட்டம்!

Print tamilkin.com in இலங்கை

மைத்திரி - மஹிந்தவுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பின் பல இடங்களிலும் நடத்தப்படும் குறித்த போராட்டம் லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அலரி மாளிகையில் இருந்தும் ஒரு குழு பேரணியாக செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த போராட்டம் தற்போது அலரி மாளிகைக்கு அருகில் மாபெரும் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தில் சஜித் பிரேமதாச, அகிலவிராஜ் காரியவசம், ராஜித சேனாரட்ன, ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த போராட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரையில் கலந்து கொண்டுள்ளதாகவும், சில வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.