சூரியனுக்கு மிக அருகில் சென்ற பார்கர் சோலார்: நாசா சாதனை!

Print tamilkin.com in தொழில் நுட்பம்


நாசா உருவாக்கியுள்ள பார்க்கர் சேலார் விண்கலம், சூரியனை நெருங்கிச் சென்று சாதனை புரிந்துள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனை ஆய்வு செய்வதற்காக, பார்க்கர் சேலார் என்ற விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் என்ற ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, இந்த பார்க்கர் சேலார் விண்கலம் சூரியனுக்கு ஏவப்பட்டது.

சுமார் 612 கிலோ எடையும், 9 அடி 10 இன்ச் நீளமும் உடைய பார்க்கர் சேலார் விண்கலம், சூரியனின் மேற்பரப்பு வரை சென்று சூரியனை ஆய்வு செய்து இதுவரை தெரியாத பல தகவல்கள் வழங்கும். இதற்காக 1,400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தைத் தாங்கும் வகையில், கார்பனால் உருவாக்கப்பட்ட வெளித்தகடு பொருத்தப்பட்டுள்ளது. வெப்பச் சலனம், வெப்பக் கடத்தல், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்படாத அளவுக்கு பார்க்கர் விண்கலம் பாதுகாப்பாய் அனுப்பபட்டுள்ளது.