இந்திய சினிமா பிரபலங்களை மிஞ்சும் இலங்கை அரசியல் வாதிகள்!

Print tamilkin.com in இலங்கை

இந்திய சினிமா பிரபலங்களை மிஞ்சும் அளவிற்கு இலங்கை அரசியல் வாதிகள் பண பரிமாற்றங்களை, கருப்பு பண சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது இலங்கை அரசியல் வாதிகளுக்கு இடையில் பல லட்சம் கோடிகள் கைமாற்றப்படுகின்றான். எமது அண்டைய நாடான இந்தியாவில் உள்ள சினிமா பிரபலங்களே பல கொடிகளை ஊதியமாகவும், கருப்பு பணங்களாகவும் சேகரிக்கின்றனர் என்பதை நாம் இதுவரை அறிந்துள்ளோம்.

ஆனால், அண்மைய நாட்களாக இடம்பெற்றுள்ள அரசிகள் குழப்பம், கட்சி தாவல்களின்போது பல லட்சம் கொடிகள் இலங்கை அரசியல் வாதிகளுக்குள் கைமாறியுள்ளன. இதனை சில அரசியல் வாதிகளே குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளனர்.

அந்த வகையில், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க, மகிந்த ராஜபக்சவுக்கு சீனா பெருமளவு நிதியைக் கொடுப்பதாக, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறிஇருந்தார்.

அதேபோல், கட்சித் தலைவர்களுக்கு தலா 500 மில்லியன் ரூபா வரையில் விலை பேசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன தரப்பு கட்சித் தலைவர்களுக்கு 500 மில்லியன் ரூபாவினையும், அமைச்சுப் பதவி வகித்தவர்களுக்கு 300 மல்லியன் ரூபாவினையும் விலையாக பேசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சித் தாவும் உறுப்பினர்களுக்கு பாரிளவில் பண வெகுமதி வழங்குவதாக பேரம் பேசப்பட்டு வருகின்றது என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.