முல்லைத்தீவில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

Print tamilkin.com in இலங்கை

கடந்த மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயிகளின் மரக்கறி தோட்டங்கள் பாதிப்படைந்திருந்தன. இதன் காரணமாக மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ளன.

இதேவேளை தற்பொழுது நிலவிவரும் மழையுடன் கூடிய வானிலையால் வெளி மாவட்டங்களில் மரக்கறி அறுவடை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளி யவளை, ஒட்டுசுட்டான் பிரதான சந்தைகளில் நூற்றுக்கு இரண்டு மடங்கினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.