19 ஆவது திருத்தம்: ஆங்கில மற்றும் சிங்கள மொழிப்பெயர்ப்புகளுக்கிடையில் பாரிய வேறுப்பாடு! - பீரிஸ் தெரிவிப்பு

Print tamilkin.com in இலங்கை

19 ஆவது திருத்தம் தொடர்பில் ஆங்கில மற்றும் சிங்கள மொழிப்பெயர்ப்புகளுக்கிடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றது என குறிப்பிட்டு பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தற்துணிவின் பெயரில் பிரதமர் ஒருவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என்ற கருத்துக்கள் எதிர் தரப்பினரால் குறிப்பிடப்படுகின்றது. இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

19ஆவது அரசியலமைப்பின் 48(01) சரத்தில் குறிப்பிட்டதற்கமைய பதவியில் இருந்து விலகுவது, அல்லது அவரே சுயமாக விலகுவது மற்றும் வேறு வழிமுறைகளில் பதவி விலகினாலும் அவர் தொடர்ந்து பதவி வகிக்க தகுதியற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ஒருவரின் பதவி காலம் மரணத்தினாலோ, அல்லது அவரே பதவி விலகுவதாலோ, வேறு காரணங்களினாலோ வெற்றிடமாகும் என்று ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் பிரதமர் ஒருவரது பதவி நீக்கம் தொடர்பில் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் தெளிவான விடயங்கள் உள்ளடக்கப்பட்வில்லை ஆனால் சிங்கள மொழிப்பெயர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது

பிரதமர் ஒருவரது பதவி கால நீடிப்பு மற்றும் பதவி நீக்கம் தொடர்பிலான பிறிதொரு முறைமைகள் தொடர்பிலும் 19ஆவது திருத்தத்தில் சிங்கள மொழிப்பெயர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

19ஆவது திருத்தத்தில் ஆங்கில மொழிப் பெயர்ப்பில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றது. இதனையே சிலர் பயன்படுத்திக் கொள்கின்றனர் என அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.