கொழும்பு சென்ற இளைஞனை காணவில்லை!

Print tamilkin.com in இலங்கை

முல்லைத்தீவு - வவுனிக்குளத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் காணமற்போயுள்ளதாக மல்லாவி பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலக்கம் 67 பாலிநகர் வவுனிக்குளத்தை சேர்ந்த குகதாசன் உமேஸ் என்ற 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணமற்போன இளைஞனை கண்டுபிடித்து தருமாறு அவருடைய தாய் விமலேஸ்வரி மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை நேற்று பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த இளைஞன் கடந்த 31ஆம் திகதி மல்லாவியில் இருந்து கொழும்புக்கு செல்வதாக கூறிச்சென்றுள்ள நிலையில் அவருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றுவரை அவர் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.