பிரதேச சபை உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

Print tamilkin.com in இலங்கை

மாத்தறை மாவட்டத்தில் ஹக்மன - கெபிலியபொல பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் வானில் வந்த குழுவினர் வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் நரவலபிட்டிய வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான பிரதேச சபை உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.

ஹக்மன பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.