அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் விபத்து

Print tamilkin.com in இலங்கை

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் கார் ஒன்று 05.11.2018 அன்று அதிகாலை மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இளைஞர்கள் சென்ற குறித்த காரே இவ்வாறு மோதுண்டுள்ளது. கொழும்பு பகுதியிலிருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி செல்லும் போது மல்லியப்பு பிரதேசத்தில் பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த காரில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளதாகவும், எனினும் அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேற்படி காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.