நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்று பொலிஸ் படை குவிப்பு!

Print tamilkin.com in இலங்கை

நாடாளுமன்றத்தை அடுத்து உள்ள பொல்துவ பகுதியில் இன்று நடைபெறவுள்ள விசேட கூட்டத்தின் காரணமாக விசேட பாதுகாப்பு மற்றும் வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் அத்தியகட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் 1200 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.