100 நாட்களை கடந்தும் முடிவின்றி தொடரும் அகழ்வுப் பணிகள்!

Print tamilkin.com in இலங்கை

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்று திங்கட்கிழமை 100 ஆவது நாளாக தொடர்சியாக இடம்பெற்று வருகின்றது.

தெடர்ச்சியாக மழை பெய்து கொண்டு இருக்கின்ற போதும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றது.

மன்னார் நீதிவான் ரி.சரவண ராஜாவின் மேற்பார்வையில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் அகழ்வு பணியானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது வரை மேற்கொண்ட அகழ்வு பணிகளின் முடிவின் படி 216 க்கு அதிகமான மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அதில் 209 அதிகமான மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டும் உள்ளது.

அத்துடன் அடையாளப்படுத்தப்பட்டு இன்னமும் அப்புறப்படுத்தப்படாத மேலதிக மனித எச்சங்களை அப்புறப்படும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.