நாடாளுமன்ற அமர்வில் மீண்டும் சிக்கல்!

Print tamilkin.com in இலங்கை

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தை திறந்த பின்னர் மீண்டும் 5 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை பிற்போடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் பிரதி சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி நிரல் தயாரிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை கூட்டும் நாளில் மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாக நாடாளுமன்றத்தை கூட்டிய பின்னர் எதிர்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை தொடர்பில் தெளிவுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

14ஆம் திகதி மாலை 12 பேரை கொண்ட நிலையான செயற்குழு ஒன்று நிறுவப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.