ரணில் பக்கம் தாவும் மேலும் மூன்று அமைச்சர்கள்!

Print tamilkin.com in இலங்கை

அமைச்சர்களாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்ட மேலும் மூன்று அமைச்சர்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில மணி நேரங்களில் அவர்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் இணையலாம் எனக் கூறப்படுகிறது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள அரசாங்கம் சட்டவிரோதமானது என சபாநாயகர் அறிவித்துள்ளதை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய அரசாங்கம் சர்வதேசம் அங்கீகரிக்காமை மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே இந்த அமைச்சர்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரதியமைச்சராக பதவி வகித்த மனுஷ நாணயக்கார, இன்று தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.