இலங்கையின் அரசியல் நெருக்கடி தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு கண்காணிப்பு!

Print tamilkin.com in இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண நாடாளுமன்றம் மிக விரைவில் கூடும் என எதிர்பார்ப்பதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்றீஷியா ஸ்கொட்லேண்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுச் செயலாளர் இதனை கூறியுள்ளார்.

அதேபோல் நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி கூட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானம் குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கவனம் செலுத்தியுள்ளார்.

இலங்கையில் சட்டம், அரசியலமைப்பை அமுல்படுத்துவதற்காக அரசியல்கட்சிகள் மற்றும் மக்கள் இடையில் விரிவாக கலந்துரையாடல் ஒன்றுக்காக அக்கறை காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை அரசு மற்றும் மக்களுக்கு உதவி தேவைப்பட்டால்,சர்வதேசத்துடன் இணைந்து உதவி செய்வதாகவும் பெட்றீஷியா ஸ்கொட்லேண்ட் குறிப்பிட்டுள்ளார்.