திருகோணமலை மாவட்டத்தில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Print tamilkin.com in இலங்கை

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக வீதிகள், வடிகால்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலையிலிருந்து பெய்து வருகின்ற மழை காரணமாக தொழிலுக்கு செல்வோர் மற்றும் பயணிகள் மழையினால் பல சிரமங்களுக்கு உள்ளானதோடு, மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாவட்டத்தில் கந்தளாய், கிண்ணியா மற்றும் திருகோணமலை, மூதூர் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.