அம்பாறை மாவட்டத்தில் அடைமழை: வெள்ளம் ஏற்படும் அபாயம்!

Print tamilkin.com in இலங்கை

தீபாவளி தினமான இன்று அம்பாறை மாவட்டத்தில் அதிகாலை முதல் அடைமழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மழையுடன் கூடிய தீபாவளி என்பதால் இந்துக்கள் சற்று சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்ட இடங்களில் தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ள அபாயம் எதிர்நோக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கில் கடந்த இரு நாட்களாக அடைமழை பெய்து வந்ததுள்ளதையடுத்து தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகள் முழுவதும் வெள்ளம் தேங்கி நிற்கிறது எனவும் வயல் பிரதேசமெங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது.

பெரும்போகத்தின் விதைப்பு வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் பெருமழை பெய்து வருவதினால் சிலர் இரண்டாவது தடவை விதைக்க வேண்டிய நிர்ப்பந்ததிற்குள்ளாகியுள்ளனர்.