மைத்திரி - மஹிந்த அரசுடன் இணைவது தொடர்பில் ஸ்ரீ.மு.காங்கிரஸ் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை! - ஹக்கீம் விளக்கம்

Print tamilkin.com in இலங்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மைத்திரி - மஹிந்த தலைமையிலான புதிய அரசுடன் இன்று இணையவுள்ளதாக பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிஷாந்த முத்துஹெட்டிகம கூறியுள்ள கருத்தை ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு உலமாக்கள் கலந்துகொண்ட சந்திப்பிலேயே ரவூப் ஹக்கீம் இதை மறுத்துள்ளார்.

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்தவிதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை.

அதேவேளை, புதிய அரசில் இணைவதாக பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறிய கருத்தை நான் அடியோடு மறுக்கின்றேன்" என்று ரவூப் ஹக்கீம் இதன் போது தெரிவித்திருந்தார்.