தனிப்பட்ட குரோதங்களை வைத்து நாட்டின் நலனுக்கு பாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம்!

Print tamilkin.com in இலங்கை

ரணில் ஜனாதிபதி மைத்திரிக்கு எச்சரிக்கை

தம்முடன் இருக்கும் தனிப்பட்ட குரோதங்களை வைத்துக்கொண்டு நாட்டின் நலனுக்கு பாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க தொடர்பாக மைத்திரிபால சிறிசேன விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ரணில் டுவிட்டர் பதிவு ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் தனிப்பட்ட குரோதங்களை மையமாக வைத்து ஜனாதிபதி தமது சட்டவிரோத நடவடிக்கைகளை அரசியலமைப்பு ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஊடாக மேற்கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களை இலஞ்சம் கொடுத்து தக்கவைக்கக்கூடாது என்றும் மைத்திரியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.