மட்டக்களப்பில் தொடரும் வெள்ளப் பெருக்கு; களத்தில் இறங்கிய கூட்டமைப்பு எம்.பி. யோகேஸ்வரன்!

Print tamilkin.com in இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக இதுவரை 499 குடும்பங்களைச் சேர்ந்த 1706 இடம்பெயர்ந்து 5 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கபபட்ட பிரதேசங்களுக்கு நேரடி விஜயம் செய்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் நிலமைகளை கேட்டறிந்ததுடன் அவசர உதவிகளை மேற்கொண்டுள்ளார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஊரியன்கட்டு, கட்டுமுறிவு, அம்பந்தாவெளி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் நாசிவன் தீவு ஆகிய கிராமங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை வெள்ளம் காரணமாக கிரான் - புலிபாய்ந்தகல் தரைவழிப் பாதை துண்டிக்கபட்டுள்ளது.