மகிந்தவிற்காக என்னால் சேலையைக் கட்ட முடியாது! - குமார வெல்கம கூறுகிறார்

Print tamilkin.com in இலங்கை

என்னால் மகிந்தவிற்காக சேலை கட்டிக் கொண்டு நாடாளுமன்றில் அமர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மகிந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற ஆதரவு கொடுப்பேன். ஆனாலும் என்னால் சேலையைக் கட்டிக்கொண்டு நாடாளுமன்றில் அமர முடியாது.

அந்த அணியுடனும் அமர மாட்டேன். நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவேன். பெரும்பான்மையினை நிரூபித்தாலும் நான் அவரது அமைச்சில் அமைச்சர் பதவியினை ஏற்கமாட்டேன்.

இந்த நாட்டில் இப்போது இரண்டு பிரதமர்கள். ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் இருக்கிறார். ஒருவர் பிரதமரின் வாசஸ்த்தலமான அலரி மாளிகையில் இருக்கிறார். இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

யார் இவர்களில் சரியான பிரதமர். எமது தலைவர் மகிந்த பிரதமராகியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் இந்த பிரச்சினையை இதனைவிடவும் சிறப்பான வழியில் தீர்த்திருக்க முடியும்.

நான் ஒருபோதும், கட்சித் தாவமாட்டேன். மகிந்தவிற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. அதனைக் காண்பித்தால் பிரச்சினைத் தீர்ந்து விடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.