ராஜித அமைச்சு கேட்கவில்லையாம்!

Print tamilkin.com in இலங்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன புதிய ஆட்சியில் அமைச்சர் பதவியைக் கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். அத்தகைய கட்டுக்கதை ஒன்று பரவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இவர் தனக்கு அமைச்சு பொறுப்பு கேட்டதாகவே நேற்றைய தினம் இலங்கை மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்து, அதற்கெதிராகப் போராட்டங்களும் நடத்தியிருந்தன.

ராஜிவுக்கு அமைச்சு பதவி கொடுத்தால் தாங்கள் போராட்டம் நடத்துப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில், ராஜிவுக்கு சுகாதார அமைச்சு பதவி கொடுத்தால் மருத்துவர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என்றும் அரசாங்கத்தை எச்சரித்திருந்தனர்.

அதேநேரம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் - பணியாளர்கள், கேகாலை, காலி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவ துறைசார்ந்தோர் அனைவரும் நேற்றைய தினம் தங்களது பகலுணவு இடைவேளையில் ராஜித மீண்டும் சுகாதார அமைச்சராக வருவதற்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.