சம்பிக்கவிற்கு ஆசை போகவில்லையாம்!

Print tamilkin.com in இலங்கை

முன்னாள் மகாநகர அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க நேற்றைய தினம் மேற்படி அமைச்சுக்கு வருகை தந்நது அமைச்சருக்குரிய ஆசனத்தில் அமர்ந்து அங்கிருந்தவர்களிடம் அரசியல் பேசியிருந்தார்.

எனினும் அவர் அங்கு வந்ததிருந்த நோக்கம் கடந்த ஆட்சியில் முறைகேடாக டென்டர்கள் அனுமதி வழங்கியிருந்த முக்கிய கோப்புகளை அங்கிருந்து எடுத்துச் செல்வதற்கே என அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், சம்பிக்கவின் மேற்படி நோக்கம் அங்கிருந்த பணியாளர்களால் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதனிடையே மேற்படி சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவரது பழைய சகாவான உதய கம்மன்பில, இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அமைச்சர் ஒருவரது ஆசனத்தில் அமர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்கவே எனத் தெரிவித்துள்ளார்.