நாடாளுமன்றினை கூட்டாமல் காலம் கடத்துவதற்கு காரணம் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசுவதற்கே! ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

Print tamilkin.com in இலங்கை

நாடாளுமன்றினை கூட்டாமல் காலம் கடத்துவதற்கு காரணம் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசுவதற்கு என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்றினை கூட்டாமல் காலம் கடத்துவதனூடாகத்தான் இன்றும் சட்டபூர்வமற்ற ஒரு பிரதமர் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றார் என்பது தான் யதார்த்தம் எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி, வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுள்ளார். சபாநாயகர் தமது வற்புறுத்தல்களினால் ஜனாதிபதியுடன் பேசி, நாடாளுமன்றினை கூட்டுவதற்கான ஒப்புதலை தந்திருந்தாலும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை.

அதனை மிகவிரைவில் செய்வதற்குத் தவறினால் நாடாளுமன்றின் சபாபீடத்திற்குள் நுழைவதற்கும் தவறமாட்டோம் என தாங்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேவையான தலைகளை இன்றும் சேகரிக்க முடியவில்லை என்பதனால் கூடுதலான தலைகளுக்கு விலைபேசிக்கொண்டிருப்பதனால்தான் காலத்தை தாமதித்துக்கொண்டு போகின்றனர் எனவும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வரலாற்றில் முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பிரதியமைச்சர் பதவி ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.