தமிழர்கள் மீது அக்கறை இல்லாத கூட்டமைப்பு! கடுமையாக சாடும் மஹிந்தவின் மகன் நாமல்!

Print tamilkin.com in இலங்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்கள் சுயநல தேவையாக தற்போது செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையாக சாடியுள்ளார்.

இதன் காரணமாகவே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழர் நலன்சார்ந்த விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் அக்கறை செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று நாமல் வெளியிட்டுள்ளார்.