வவுனியாவில் 250,000 ரூபா கள்ள நோட்டுடன் இளைஞர் கைது!

Print tamilkin.com in இலங்கை

வவுனியாவில் 250,000 ரூபாய் பெறுமதியான கள்ள நோட்டுக்களுடன் இளைஞர் ஒருவர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று மதியம் 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் ஆலோசனையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டீ.எம்.தென்னக்கோனின் நெறிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராய்ச்சி தலைமையில் சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியா, தேக்கவத்தை பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 5000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

250,000 ரூபாய் பெறுமதியான 5000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனை உடமையில் வைத்திருந்த புத்தளம், மதுரங்குளி, ஜின்னாவத்தை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய முகமட் சப்ராஸ் என்பவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.