வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

Print tamilkin.com in இலங்கை

வவுனியா - ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள மறவன்குளம் பகுதியில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மறவன்குளம் 6ஆம் ஒழுங்கையில் வசித்து வந்த விவசாயியான இராமசாமி ஜெயக்குமார் (வயது 50) எனும் 6 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று இரவு வீட்டில் கடும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் இன்று காலை மனைவி, கணவனை தேடிச் சென்றுள்ளார். அவர்கள் வசித்து வரும் காணியில் இரண்டு வீடுகள் உள்ள நிலையில் பாவனையற்ற வீட்டில் கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இது குறித்து ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.