வெறிச்சோடிக் கிடக்கும் ரணிலின் வாசஸ்தலம்!

Print tamilkin.com in இலங்கை

இலங்கை பிரதமரின் உத்தியோகபூர்வ வசஸ்தலமான அலரி மாளிகை தற்போது வெறிச்சோடிக் கிடப்பதாக தெரிய வருகிறது.

பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது வலுக்கட்டாயமாக அங்கு தங்கியுள்ளார்.

அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கட்சியின் தொண்டர்கள் பெருமளவானோர் அலரி மாளிகையில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் அலரி மாளிகையில் இயல்பு நிலை மாறி, தற்போது கேளிக்கை விருந்தமாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெறிச்சோடிக் கிடக்கும் அலரி மாளிகையில் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் உள்ளே அரங்கேறுவதாக சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான புகைப்படங்கள் பல சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

நாட்டின் அடுத்த கட்ட நகர்வினை நோக்கி நகரும் தீர்மானமிக்க முடிவுகளை எடுக்கும் அலரி மாளிகை, இன்று வெறிச்சோடி கிடப்பதாக பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.