தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட வேண்டும்!

Print tamilkin.com in இலங்கை

நாமல் ராஜபக்ச கூறுகிறார்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர் டுவிட்டர் தளத்தில் இன்றைய தினம் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டமைப்பில் உள்ள சில தனி மனிதர்களின் சுய நல தேவைகளுக்காக ஒட்டு மொத்த தமிழ் சமூத்தின் அடையாளமாக திகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாளிகள் ஆக்கும் செயல் என கூறியுள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையில் பெறுமதியான கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது.

நீண்ட நாள் கைதிகளாக உள்ள மு/போராளிகள் தொடர்பில் ஜனாதிபதி @MaithripalaS மற்றும் பிரதமர் @PresRajapaksa தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர் எனவும் அவர் தனது மற்றொரு பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.