புதிய வியூகம் வகுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

Print tamilkin.com in இலங்கை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் புதிய வியூகங்களை வகுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்படி கட்சியின் தலைமைப் பதவியில் உடனடி மாற்றம் செய்யப்பட உள்ளதாக கொழும்பு சிங்கள இணையத் தளமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்றைய தினம் நள்ளிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றை கலைத்திருந்தார்.

கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரின் பெயர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டு வருவதாகவும் இதுவரையில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதுடன் அது தொடர்பில் தற்பொழுது தீவிர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விரிவான ஓர் கூட்டணியை உருவாக்கி அதில் பல்வேறு தரப்பினை உள்வாங்கி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி வியூகம் வகுத்து வருகின்றது.

யானை சின்னமன்றி வேறும் ஓர் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும் பேசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.