இ.போ.ச. ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு!

Print tamilkin.com in இலங்கை

இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி, நடத்துனர், தொழில்நுட்பவியலாளர், தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரினதும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய சம்பள முறை வெளியிடும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

14250 ரூபாவான அடிப்படை சம்பளம் 25550 ரூபா வரை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் நிறைவேற்று உத்தியோகத்தர்களின் சம்பளமும் இதுபோன்று அதிகரிக்கப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.