இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதன் நோக்கம் மக்களாட்சியினை நிலைநாட்டுவதற்கே..!

Print tamilkin.com in இலங்கை

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதன் நோக்கம் மக்களாட்சியினை நிலைநாட்டுவதற்கே. நாம் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மக்களின் கோரிக்கைகளுக்கு அமையவே பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையினை நான் பெற்றுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.

விஜயராமையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையினை பெற்ற பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து எதிர் தரப்பினர் ஆட்சியை கவிழ்க்க பல்வேறு உபாய முறைகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால் அவர்கள் தீர்வினை பெற வேண்டிய நீதிமன்றத்தினை நாடவில்லை. குறுக்கு வழியிலான வழிமுறைகளை பின்பற்ற அரசாங்கத்தை ஒரு போதும் வீழ்த்த முடியாது எனவும் இதன்போது தெரிவித்தார்.