நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிராக கூட்டமைப்பு முக்கிய தீர்மானம்!

Print tamilkin.com in இலங்கை

அரசியலமைப்பு ஜனநாயக மீறலுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்கின்ற கருத்தை நாங்கள் கொண்டிருக்கின்றோம். அதே கருத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சியும் இருக்கின்றது என்று முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

எனவே ஒத்த கருத்தோடு நாங்கள் செயற்படுகின்றோமே தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எந்தவித எண்ணப்பாடும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

நாளைய தினம் நாடாளுமன்றம் கலைப்பு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.