இலங்கையின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது! – சமந்தா பவர் தெரிவிப்பு

Print tamilkin.com in இலங்கை

மோசமடைந்து வரும் அரசியல் நெருக்கடிகள் இலங்கையின் ஜனநாயகத்துக்கும், இலங்கையர்களுக்கும் உண்மையான அச்சுறுத்தலாகும் என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

கீச்சகப் பக்கத்தில் இதுதொடர்பாக அவர் பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.

அதில், “எதேச்சாதிகாரியான முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நிலை நிறுத்தும் முயற்சியாகவே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

மோசமடைந்து வரும் அரசியல் நெருக்கடிகள் சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கும், இலங்கையர்களுக்கும் உண்மையான அச்சுறுத்தலாகும்” என்று சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.