தேர்தலை எதிர்கொள்ள தயங்கும் ஐக்கிய ​தேசியக் கட்சி: ஜீ. எல். பீரிஸ்

Print tamilkin.com in இலங்கை

ஐக்கிய ​தேசியக் கட்சிக்கு தேர்தலை எதிர்கொள்ள பயம் வந்துள்ளதுடன், இப்போதே அவர்கள் தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதால் தான் தேர்தலுக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தேர்தலில் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கையுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலை நடத்துவதற்கு எதிராக, நீதிமன்றத்துக்குச் செல்லமாட்டார்கள்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட மேலும் பல கட்சிகள் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளமையானது உண்மையான மக்கள் விருப்பம் குறித்து அவர்களுக்குள் பயம் ஏற்பட்டுள்ளமையைக் காட்டிக் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.