சீரற்ற காலநிலையால் நாயாற்று பகுதி மீனவர்களின் கடற்தொழில் பாதிப்பு!

Print tamilkin.com in இலங்கை

முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாயாற்று பகுதி மீனவர்களின் கடற்தொழில் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தொடரும் சீரற்ற காலநிலையினால் நாயாற்று பகுதி மீனவர்கள் மீன்பிடித்தொழிலுக்கு செல்லவில்லை என நாயாறு கிராமிய கடற்தொழில் அமைப்பின் செயலாளர் கதிரேஸ் கமலேஸ்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

இதனால் மீனவக்குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள மீனவர்களின் வாடிகள் கடந்த 8ஆம் மாதம் ஏற்பட்ட தீயனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், இதனால் அப்பகுதி மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.