அர்ஜூன் மகேந்திரனை விரைவில் கைது செய்வோம்! - கெஹலிய தெரிவிப்பு

Print tamilkin.com in இலங்கை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை விரைவில் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வர உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அர்ஜூன் மகேந்திரன் எதிர்வரும் சில நாட்களில் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் சில தினங்களில் மகேந்திரனை கைது செய்து நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அர்ஜூன் மகேந்திரனை கைது செய்யும் பொறுப்பினை சர்வதேச பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

நாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாத வகையில் விமான நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன் மகேந்திரன் எங்கிருந்தாலும் கைது செய்யப்படுவார் என சர்வதேச பொலிஸார், இலங்கை பொலிஸாருக்கு உறுதியளித்துள்ளனர் என சிங்கள ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.