சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Print tamilkin.com in தொழில் நுட்பம்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் டெவலப்பர் நிகழ்வின் முதல் நாளில் அறிமுகம் செய்யப்பட்டது.

சாம்சங் எலெக்டிரானிக்ஸ் கோ லிமிட்டெட் நிறுவனம் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஆன்ட்ராய்டு டெவலப்பர்கள் மடிக்கக்கூடிய சாதனத்திற்கான செயலிகளை உருவாக்கும் பணிகளை துவங்குகின்றனர்.

மடிக்கக்கூடிய போன்களில் உள்ள ஸ்கிரீன் திறக்கப்பட்ட நிலையில் டேப்லெட் போன்று பயன்படுத்த வழி செய்கிறது. அதன்மூலம் இது பாக்கெட்டில் எளிதில் வைத்து பயன்படுத்தக் கூடிய சிறிய டேப்லெட் ஆக இருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் மொபைல் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் ஜஸ்டின் டெனிசன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் சாதனத்தை அறிமுகம் செய்தார். இந்த சாதனம் 7.3 இன்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. மடிக்கப்பட்ட நிலையில் அதிக தடிமனான மொபைல் போன் போன்று காட்சியளிக்கிறது.

புதிய மடிக்கக்கூடிய சாதனம் செய்தியாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு வழங்கப்படவில்லை. புதிய சாதனத்தின் உற்பத்தி பணிகள் வரும் மாதங்களில் துவங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

சீனாவில் ஹூவாய் டெக்னாலஜிஸ் கோ லிமிட்டெட் நிறுவனமும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.