கோத்தாவிற்கான தடை நீக்கம்!

Print tamilkin.com in இலங்கை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விஷேட மேல் நீதிமன்றால் இன்று நீக்கப்பட்டுள்ளது.

அரச நிதி மோசடியில் கோத்தபாயவிற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விஷேட மேல் நீதி மன்றில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகிய போது எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி முதல் ஜனவரி 14ஆம் திகதி வரையில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.