அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு!

Print tamilkin.com in இலங்கை

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள் கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தில் இன்று விசேட பூசை ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

அத்தோடு ஏ9 வீதியில் பட்டாசுகளை கொளுத்தி புதிய அமைச்சரை வரவேற்றுள்ளனர். குறித்த வீதியில் பட்டாசுகளை கொளுத்தியதனால் சிறுது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் இதன்போது தெரிவித்திருந்தார்.