இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலியா கடும் விழிப்புடன் இருக்கின்றதாம்!

Print tamilkin.com in இலங்கை

இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க நடத்தப்பட வேண்டிய வாக்கெடுப்பு நடத்தப்படாது என வெளியாகி வரும் செய்திகள் சம்பந்தமாக அவுஸ்திரேலியா கடும் விழிப்புடனும் அவதானிப்புடனும் இருந்து வருவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹச்ஸ்சன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க நடத்தப்பட உள்ள வாக்கெடுப்பு நடக்காது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இது சம்பந்தமாக அவுஸ்திரேலியா கடும் விழிப்புடனும் அவதானிப்புடனும் இருந்து வருகிறது எனக் கூறியுள்ளார்.