சொன்னதைச் செய்துவிட்டேன்! - மகிந்த பெருமிதம்

Print tamilkin.com in இலங்கை

தான் கூறியது போலவே பௌர்ணமி தினத்திற்கு முன்னதாகவே அரசாங்கத்தை கவிழ்த்து விட்டதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தனது தீர்மானம் சரியானதா என நாடாளுமன்றத்தில் அல்ல, மக்களிடமே வினவ வேண்டும். “ஏன் உங்களுக்கு 8 அல்லது 6 மாதங்கள் பொறுமையாக இருக்க முடியவில்லை என வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் என்னிடம் கேட்டனர்.

எனினும், பொறுமையாக இருந்திருந்தால் 8 மாதங்களில் இலங்கையில் மீதமாவது என்ன என்பது தொடர்பில் பிரச்சினையுள்ளது. அனைத்தையும் பட்டியலிட்டு விற்பனை செய்யும் திட்டத்தில் அரசாங்கம் இருந்தது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.