ஐக்கிய தேசியக் கட்சியில் அதிரடி மாற்றம்!

Print tamilkin.com in இலங்கை

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதனால் கொழும்பு அரசியல் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளது.

எவ்வாறாயினும், இது குறித்த உத்தியோகப்பூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. இதேவேளை, சில மணி நேரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.