இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பிரிட்டன் கவலை!

Print tamilkin.com in இலங்கை

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கைக்கான பிரிட்டனின் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் கவலையுடன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் முக்கியமான பணிகளையாற்றுவதற்கே நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தனர்.

எனினும் இலங்கை மக்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை மீண்டும் பார்த்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிற்கும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றத்திற்கும் உரிய விதத்தில் செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.