வரவு - செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல்! - அஜித் பி பெரேரா தெரிவிப்பு

Print tamilkin.com in இலங்கை

அடுத்த ஆண்டின் நாட்டில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுபடுத்துவதற்கு பொருத்தமான தீர்வொன்றை மேற்கொண்டதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல தாம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

“நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தலுக்கு செல்ல நாம் தயாராக உள்ளோம்.

மேலும் மக்கள் எமக்கு 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கே அதிகாரத்தினை வழங்கியுள்ளனர். ஆகையால் அக்காலம் நிறைவுபெறும் வரையில் ஆட்சி செய்ய விரும்புகின்றோம்.

இவ்விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்குவராயின், எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல நாம் தயாராக உள்ளோம்.

இதேவேளை நாட்டின் பொருளாத வீழ்ச்சியை தடுப்பதற்கான பாதீட்டை நிறைவேற்றிய பின்னர் பொது தேர்தலுக்கு செல்லவே எமக்கு விருப்பம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.